App herunterladen
93.33% மகா யாகம் / Chapter 14: அணையாத நெருப்பு

Kapitel 14: அணையாத நெருப்பு

மாறன் திடீரென தயார் ஆகுங்கள் என்று கூறினான் அப்போது உடனே மாறனை நோக்கி நின்ற காவல் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் உடனே திரும்பி இனியனை நோக்கி நின்றார்கள்.

அதன்பின்

இனியன்: என்ன இது?

மாறன்: எலி வலையில் சிக்கிக் கொண்டது.

இனியன்: புரியவில்லை.

மாறன்: நான் விரித்த வலையில் எலி சிக்கிக் கொண்டது என்று சொன்னேன்.

இனியன்: யார் அந்த எலி?

மாறன்: நீ தான். இங்கு நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் நீ தான் காரணம் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.

இனியன்: ஓ கண்டுபிடித்து விட்டாயா ? உனக்கு எப்படி தெரியும்.

மாறன்: திட்டம் போட்டவனே நான் தானே.

இனியன்: புரியவில்லை.

மாறன்: புரியும் படியே சொல்கிறேன் கேள்.

நான் ஒரு ரகசிய உழவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். உன்னை பிடிக்கத் தான் தீவிரவாதி போல் நடித்தேன்.

(இனியன் அதிர்ச்சி அடைந்தான்)

இனியன்: உண்மையாக வா ?

மாறன்: ஆமாம்.

இனியன்: அப்போ என் நண்பர்கள் விக்ரம், தேவா?

மாறன்: அவர்களும் என்னுடன் சேர்ந்து வேலை பார்த்த அதிகாரிகள் தான்.

இனியன்: அப்போ அவர்கள் இறக்க வில்லை யா ?

மாறன்: இல்லை அவர்கள் இறந்து விட்டார்கள். உன்னை பிடிக்கவே உயிர் தியாகம் செய்தனர் நாட்டை காப்பாற்றவே உயிர் தியாகம் செய்தனர்.

உனக்கு தெரிந்தது ஒரு உண்மை தான்.

இனியன்: எந்த உண்மை?

மாறன்: தேவாவும் நானும் இரட்டை சகோதர்கள் என்று ஒரு விஷயம் தான் உனக்கு தெரியும். அதுவும் என் அம்மா உன்னிடம் சொன்னது.

இனியன்: மற்றொரு உண்மை உனக்கு தெரிய வந்துருக்கு மே?

மாறன்: ஆம் அதுவும் தெரியும். ஆதி என்ற சிறுவன் உன்னுடைய கூட்டாளி என்ற ரகசியமும் எனக்கு ஏற்கனவே தெரியும்.

இனியன்: நீ சரியாக தான் கணித்திருக்கிறாய்.

மாறன்: அது மட்டுமா? உன்னுடைய கூட்டாளியை சாட்சியாக வைத்தது உன்னுடைய சாமர்த்தியத் தனம் .

இனியன்: உண்மை தான்.

மாறன்: நீ உன் கூட்டாளியான ஆதியை கொன்று விட்டான் என்பதற்காக வே தேவாவை திட்டம் போட்டு கொன்றாய். அதுவும், சாட்சியை கொன்று விட்டான் அதனால் தேவா தான் குற்றவாளி என்று நாடகமிட்டு சட்டப்பூர்வமாக தேவாவை கொன்று விட்டாய். சரிதானே?

இனியன்: ஆமாம் சரிதான். ஆனால் உனக்கு எப்படி தெரியும்?

மாறன்: அதற்கு முன்னால் உன்னை பற்றி சில தகவல்கள் எனக்கு தெரிய வேண்டும்.

இனியன்: என்ன தெரிய வேண்டும்?

மாறன்: நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னுடைய திட்டம் என்ன?

இனியன்: என்னை பற்றி தெரிய வேண்டும் என்றால் இருவது வருடங்களுக்கு முன்பு போக வேண்டும். அதாவது கதையின் ஆரம்ப புள்ளி.

மாறன்: சரி தொடங்கு.

இனியன்: இருவது வருடங்களுக்கு முன் ராஜன் என்ற மந்திரியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற விஷயம் உனக்கு தெரியுமா?

மாறன்: கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இனியன்: அப்போது அங்கிருந்து ராஜனின் வளர்ப்பு மகன் தப்பித்து விட்டான் என்ற தகவலும் உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்?

மாறன்: அதுவும் நன்றாகவே தெரியும்.

இனியன்: அந்த சிறுவன் தான் நான்.

மாறன்: உண்மையாகவா ?

இனியன்: அப்படி இன்னும் சிலர் நம்புகின்றனர் ஆனால் அதன் உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்.

மாறன்: எந்த உண்மை?

இனியன்: ராஜனின் வளர்ப்பு மகன் இனியன் ஏற்கனவே இறந்து விட்டான்.

மாறன்: புரியவில்லை.

இனியன்: என்னுடைய அப்பா ஒரு தீவிரவாதி . என் அப்பாவும் நானும் சில நண்பர்களும் ராஜனை கொள்ள திட்டம் போட்டோம் அதனால் அன்று இரவு ராஜனின் வீட்டிற்கு சென்று முதலில் ராஜனை தலையில் அடித்து கொள்ள முயன்றோம் திடீரென இனியன் தடுக்க வந்தான் அப்போது நாங்கள் முதலில் இனியனைத் தான் கொன்றோம் அதன் பின்னர் தான் ராஜனின் மனைவி கீழே இறங்கி வந்தாள் பின் மனைவியை கொன்றோம்.

மாறன்: ராஜனை என்ன செய்தீர்கள்.

இனியன்: நாங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு தடையாக இருந்தவர் ராஜன் தான் அதனால் நாங்கள் ஒரு திட்டம் போட்டோம்.

மாறன்: என்ன திட்டம் அது?


Load failed, please RETRY

Wöchentlicher Energiestatus

Rank -- Power- Rangliste
Stone -- Power- Stein

Stapelfreischaltung von Kapiteln

Inhaltsverzeichnis

Anzeigeoptionen

Hintergrund

Schriftart

Größe

Kapitel-Kommentare

Schreiben Sie eine Rezension Lese-Status: C14
Fehler beim Posten. Bitte versuchen Sie es erneut
  • Qualität des Schreibens
  • Veröffentlichungsstabilität
  • Geschichtenentwicklung
  • Charakter-Design
  • Welthintergrund

Die Gesamtpunktzahl 0.0

Rezension erfolgreich gepostet! Lesen Sie mehr Rezensionen
Stimmen Sie mit Powerstein ab
Rank NR.-- Macht-Rangliste
Stone -- Power-Stein
Unangemessene Inhalte melden
error Tipp

Missbrauch melden

Kommentare zu Absätzen

Einloggen